Monday, December 19, 2011

தவிப்பு





நீ என் அருகில் இருக்கும்போது விளையாட்டாய் இருந்தவை,
சிறிது விலகியதும் விஷமாய் ஆனது...

மாறியது நீயே என்றாய்...
மாறியது நான் எனும்போதிலும் 
மாற்றியவள் நீயன்றோ...

சிரித்தாய் - சிறகடிக்கிறேன் சிறுபிள்ளைபோல் 
உனக்குள் சிறை கொண்டதை அறியாமல்...

கோடி முறை சொல்லியிருப்பேன் எனக்குள்,
உன்னிடம் ஒரு முறை சொல்ல  என் உயிர் போகிறது...!

சொல்லிவிடவா...?
எனக்குள்ளேயே மெல்லவா...?



No comments:

Post a Comment